quote 21 Sep

அம்மா அருகில் இல்லை
பசி வயிற்றில் உறைக்கிறது

quote 29 Apr
பழக்கங்களின் சக்தி அளப்பெரியவை. பழக்கங்களை, உருவாக்குவதன் மூலமோ உருமாற்றுவதன் மூலமோ, தனிநபர் முதல் மொத்த சமூகம் வரை பயனடைய முடியும்.
— மாயக்கூத்தன்
சொல்வனம்
quote 10 Mar
கவனிப்பார் இல்லாமல்
வாடிக் கொண்டிருக்கிறது
தொட்டிச் செடி.
quote 16 Feb
போக்குவரத்து நெரிசல்
தலைக்கு மேலே
புறாக்கள் பறந்து கொண்டிருக்கின்றன
text 7 Jan Dissolution

I have seen last days of plenty of folks at office. At the send offs, there is almost always tears when they give one last look at the building. It is standing as it always has been. The building always wins.

quote 16 Dec

ரெண்டு வயசு நிலாக் குட்டி
சாப்டுட்டு இருந்த பிஸ்கட்ட கேட்டதும்
வாயிலிருந்து எடுத்து குடுக்கறா

மூணு வயசு நிலாக் குட்டி
தம்பி விளையாடிட்டு இருந்த
பொம்மைய பிடுங்கிக்கறா

quote 11 Nov
கை தவறி
கீழே விழுந்த பாத்திரம்
அறையெங்கும்
ஒலித்துக் கொண்டிருக்கிறது
quote 5 Nov
மேலே பறந்து டுப் என்று வெடித்த
ராக்கெட்டைப் பார்த்து
நிலாக்குட்டி குதூகலித்தாள்
“தீபாவளி வந்துடுச்சீ”
quote 29 Aug
ஒரு கேள்வியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்
கிடைத்த பதிலை விழுங்கிக் கொண்டிருந்தது
இப்போதைக்கு போதும் என்றாலும்
மீண்டும் பசிக்கும் என்று திடுக்கிடலோடு உணர்ந்தேன்
quote 31 May
வடு மாங்காயைக் கடித்து விட்டு
மோர் சாதத்துக்கு வாய் திறந்து
என் குழந்தை காத்திருக்கும் போது
ஒரு முத்தம் கொடுத்தேன்

Design crafted by Prashanth Kamalakanthan. Content powered by Tumblr.